இந்தியா முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 94.70 கோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2021-10-10 08:44 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 415 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 94 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்று மேலும் உயர வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவு தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என எதுர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Dailythanthi

Tags:    

Similar News