கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 97% மக்களுக்கு திருப்தி: கருத்து கணிப்பில் தகவல்.!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 97% மக்களுக்கு திருப்தி: கருத்து கணிப்பில் தகவல்.!

Update: 2021-02-05 17:56 GMT

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் 97 சதவீதம் பேர் தடுப்பூசி மிகவும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜன.,16ம் தேதி முதல் தடுப்பூசி போட தொடங்கப்பட்டது. இதில் இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளதாவது: தடுப்பூசி போட்ட அனைவருக்கும் ஒருநாள் விட்டு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினோம். அதில் 5 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இணைய முகவரி வழங்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 5,12,128 மக்களிடம் பதில்கள் பெறப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக 97 சதவீதம் பேர் திருப்திகரமாக இருப்பதாக பதில் தெரிவித்துள்ளனர்.

வரும் காலங்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வேகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
 

Similar News