போலி அடையாளத்துடன் திருமணம் செய்த நபர்! "லவ் ஜிகாத்" குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு!

போலி அடையாளத்துடன் திருமணம் செய்த நபர்! "லவ் ஜிகாத்" குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு!

Update: 2020-12-20 18:16 GMT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மதமாற்றத் திருமணத்திற்கு எதிராக அதனைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல வழக்குகள் அதன் கீழ் பதிவாகி வருகின்றனர்.

தற்போது அந்த சட்டத்தின் கீழ் கண்னுஜ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் அடையாளத்தை மற்றும் மறைத்து அந்த பெண்ணை இஸ்லாமிற்கு மாற்றுவதற்காகத் திருமணம் செய்து கொண்டதாக்க வழக்குப் பதிவாகியுள்ளது. 

இந்த குற்றச்சாட்டானது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் பதிவாகியுள்ளது. அவர் உள்ளூர் பாரதீய ஜனதா கட்சித் தலைவரை அணுகி காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். 

பதிவு செய்யப்பட்ட FIR யில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குர்ஷஹைகுஞ்சில் தையல் தொழில் செய்து வருகிறார் மற்றும் அவரது மகள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு முஸ்லீம் நபர் மீது காதல் கொண்டுள்ளார். ஆனால் அந்த நபர் தனது உண்மையான அடையாளம் மற்றும் மதத்தை மறைத்துப் பழகிவந்துள்ளார். அவர் தன் பெயரை ராகுல் வர்மா என்று அறிமுகம் செய்துகொண்டு மற்றும் டிசம்பர் 9 இல் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

மேலும் அவரை அடையாளம் காணுவதற்காக தற்போது அவர்களது திருமண  புகைப் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். "என் மகளைத் திருமணம் செய்து கொள்ள அவர் ஏமாற்றியுள்ளார். அவனது நடவடிக்கை என் மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளது மற்றும் சமூகத்தில் மரியாதையைக் குறைத்துள்ளது," என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை FIR யில் பதிவு செய்துள்ளார். 

மேலும் மாவட்டத்தின் துணைத் தலைவர் ஜீது திவாரி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் உட்படத் தந்தையை அணுகி காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறை SP பிரசாந்த் சர்மா இந்த வழக்கை உறுதிசெய்து அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிவித்தார். 

Similar News