ஞானவாபி சிவலிங்கத்தை வழிபட உரிமை வேண்டும் - இந்துக்கள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் இந்துக்களை வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் இருக்கும் இந்து கடவுள்களை வழிபடுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி இந்துப் பெண்கள் வாரணாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மசூதியில் ஆய்வு நடத்தி வீடியோவாகப் பதிவு செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி கள ஆய்வு நடத்தப்பட்டதில் மசூதியில் சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் இருக்கின்ற ஞானவாமி மசூதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி முக்தி தளத்தின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், சிவன் கோயிலை இடித்துவிட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்துக்களை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: News 7 Tamil