நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு அபுதாபி இந்து கோவில்: இந்திய நாடாளுமன்ற சபாநாயகர்!
உலக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அபுதாபி இந்து கோயில் விளங்குகிறது என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 17 பேர் கொண்ட தூதுக்குழுவினர் அபுதாபியில் கட்டப்பட்டு வரும் BAPS இந்து மந்திரை பார்வையிட்டனர். ஃபெடரல் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆயிஷா முகமது அல் முல்லா குழுவினருடன், மதத் தலைவர் பூஜ்ய பிரம்மவிஹாரி சுவாமிகள் பாரம்பரிய முறையில் அனைவரையும் வரவேற்றனர். பிர்லா முதன்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயணத்தின்போது அவர் உலக நல்லிணக்கத்திற்கு இந்த கோவில் ஒரு சிறந்த உதாரணம் என்றார். BAPS இந்து மந்திர் ஒரு கோவிலைக் காட்டிலும் மேலானது என்றும் கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "இது உண்மையிலேயே ஆன்மீகம், அழகு மற்றும் உலகளாவிய ஒரு சோலை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் மற்றும் இந்தியாவின் தலைவர்களின் பெருந்தன்மையும் நேர்மையும் வரும் தலைமுறைகளால் கொண்டாடப்படும். இந்த தன்னலமற்ற நல்லிணக்கப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரமுக் சுவாமிகள், BAPS துறவிகள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்களை நான் வாழ்த்துகிறேன். இது இந்தியாவுக்கும், உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்" என்று அவர் கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் சுஷில் குமார் மோடி, "உலகெங்கிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த கோயில் சின்னமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் வித்தியாசமான லீக்கில் அதன் நிலையை குறிக்கிறது" என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தூதுக்குழு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளது. "பாரம்பரிய கோவிலின் நோக்கம் மனதையும் இதயத்தையும் ஒருங்கிணைப்பதாக" என்று பிரம்மவிஹாரி சுவாமி கூறினார்."BAPS இந்து மந்திர் இந்தியாவையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் மட்டும் நெருக்கமாக்கவில்லை. ஆனால் நாடுகள், கலாச்சாரங்கள், சமூகங்கள் மற்றும் மதங்களை நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. உலகளாவிய நல்லிணக்கத்திற்காக இந்த ஆன்மீகச் சோலையை உருவாக்குவதில் ஆதரவு மற்றும் ஊக்குவித்ததற்காக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்" என்று இந்து மந்திர் குழு சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Input & Image courtesy: Khaleejtimes