அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற இந்திய பெண் விமானி: யார் அவர்?

தற்போது அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற இந்தியப் பெண் விமானி பல்வேறு தரப்புகளில் இருந்து குவியும் பாராட்டுக்கள்

Update: 2022-08-21 13:24 GMT

அமெரிக்க அருங்காட்சியகத்தில் அதிலும் குறிப்பாக அமெரிக்க விமானிகள் அருங்காட்சியகத்தில் இடம் பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால் அப்படிப்பட்ட அந்த அருங்காட்சியகத்தில் இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். யார் இந்த பெண்? என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூர் வரை, சுமார் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த இந்தியாவின் இளம் பெண் விமானி ஜோயா அகர்வால். 


இந்த சாதனையின் காரணமாகத்தான் இவர் தற்போது அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து பெண் விமானி என்று முறையில், இவர் அங்கு இடம்பெற்று இருப்பது பல்வேறு இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காகவும், உலகமெங்கும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த பெருமை கிடைத்துள்ளது. 


பெண்கள் தற்போது அதிக அளவில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு இடத்தை அவர்கள் பிடித்து இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். அந்தவகையில் இந்திய பெண் விமானி தற்போது அமெரிக்காவில் விமான அருங்காட்சியகத்தில் இடம் பெற்று இருப்பது மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றது. மேலும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரமாக இது பார்க்கப்படுகின்றது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News