குஜராத்தில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடிக்கும்: அமித்ஷா பேச்சு!

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூன்றில் இரு பங்கு இடங்களை நிச்சயம் கைப்பற்றும்.

Update: 2022-09-15 08:15 GMT

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாக குஜராத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் பல்வேறு வியூகங்களை பா.ஜ.க செயல்படுத்தி வருகின்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வகைகளில் முயற்சிக்கின்றது. மூன்றாவது தரப்பான கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது.


டெல்லி, பஞ்சாப் இணை இரண்டு மாநிலங்கள் ஆட்சியை கைப்பற்றிவிட்ட ஆம் ஆத்மி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் குஜராத்தை கைப்பற்றவும் கெஜ்ரிவாலின் முழு திட்டத்தின் கீழ் களமிறங்கியுள்ளது. கெஜ்ரிவாலின் நிகழ்ச்சியை சாடும் வகையில் பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்று காந்தி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி வாயிலாக தோன்று பேசினார். அப்போது அவர் கனவுகளை விற்பவர்கள் தேர்தலில் ஒரு பொழுதும் வெற்றிபெற முடியாது.


நான் குஜராத் மக்களை நன்கு அறிவேன். வேலை செய்கின்றவர்களுக்கு தான் குஜராத் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதால், கனவு விற்பவர்கள் ஒரு பொழுதும் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. எனவேதான் மக்கள் பா.ஜ.க பக்கம் இருக்கிறார்கள். பா.ஜ.க அபாய அபாரமான வெற்றியின் சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குஜராத் மக்கள் பா.ஜ.க பக்கம் தான் என்பதை முதல் மந்திரி பூபேந்திர பட்டேலுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் பிரதமர் தலைமையின் கீழ் வரும் சட்டமன்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று அரசு அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.

Input & image courtecy:dinamani news

Tags:    

Similar News