"உ.பி'யில் 300'க்கும் அதிகமான தொகுதிகளை பா.ஜ.க வெல்லும்!" அடித்துக் கூறும் அமித் ஷா!

Update: 2022-02-04 13:56 GMT

"உத்திர பிரேதசத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களது  ஆட்சி, பிரதமர் அறிவித்த அத்தனை நலத் திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்துள்ளது." என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த வாரம் முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் உத்தரப்பிரதேச அரசியல் சூடு பிடித்துள்ளது,

2017 இல்  உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் அவர்கள் ஆட்சி    பொறுப்பேற்றது முதல்,   உத்தர பிரதேச மக்களுக்கு நல்லாட்சி புரிந்து வருகிறார், இதனால்  வரக்கூடிய தேர்தலிலும் பா.ஜ.க'விற்கு வெற்றி முகம்தான் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்துக்  கூறி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று  யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இந்த நிகழ்வுக்கு முன்னர்  அமித்ஷா அவர்கள் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்: 2013இல் உத்தரப் பிரதேச பாஜக பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்பொழுது இங்கு உள்ள பத்திரிக்கையாளர்கள் என்னிடம் " இரண்டு இலக்க இடங்களைக் கைப்பற்ற முடியாது இடத்திற்கு கட்சித் தலைமை உங்களை அனுப்பியுள்ளதே" என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தான் 2 இலக்கத்தில் நின்றது.

இன்று யோகி அவர்கள் மனு தாக்கல் செய்கிறார். நாம் கண்டிப்பாக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறோம் " என்று அமித்ஷா கூறினார்.

Tamil Hindu

Tags:    

Similar News