தொடர்ந்து குறி வைக்கப்படும் இந்து கோவில்கள் - பெரிய நாச வேலையின் ஆரம்பப் புள்ளியா இது ?
Temple vandalized in Srikakulam district, no theft reported
ஸ்ரீகாகுளம் மாவட்டம் கரகவலசை கிராமத்திற்கு அருகில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் சிலைகள் கடந்த வாரம் சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னரே நடந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக வலைதளங்களில் இந்த வன்முறைச் செய்தி வைரலான பிறகு கோவில் பூசாரி இது குறித்து புகார் அளித்தார்.
பூசாரி தினசரி பூஜை செய்யச் சென்றபோது கோவில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி தேவி, மகிசாசுர மர்தினி மற்றும் கணேஷ் சிலைகள் சிதைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து அவர் கோவில் கமிட்டிக்கு புகார் அளித்தபோதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், மாநில அரசு உத்தரவிட்ட போதிலும் கோவிலில் எந்த சிசிடிவிகளும் நிறுவப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பூசாரி நேரடியாக காவல்துறையை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோவிலில் இருந்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் எதுவும் காணாமல் போகவில்லை.
ஸ்ரீகாகுளத்தின் எஸ்பி அமித் பர்தர், டிஎஸ்பி எம்.மகேந்திரா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்தனர்.
"நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். ஜனவரி மாதம் சிசிடிவி கேமராக்களை நிறுவ கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண துப்பு சேகரித்து வருகிறோம், "என்றார் டிஎஸ்பி மகேந்திரா.
மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சங்கராந்தி சமயத்தில் பக்தர்கள் வருகை தருகின்றனர். மற்ற நாட்களில், பூஜை மற்றும் ஆர்த்திகளுக்காக பூசாரி மட்டுமே கோயிலைத் திறக்கிறார்.