மக்களுக்காக ராணுவ மருத்துவமனை திறக்கப்படும்.. பிரதமர் மோடி உறுதி.!
சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
இதனிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
தற்போதைய சூழலில் மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று மத்திய பிரதேச முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.