கென்யா நாட்டின் முன்னாள் பிரதமரது மகளின், கண் பார்வையை மீட்டெடுத்த ஆயுர்வேத சிகிச்சை!

Update: 2022-02-13 11:49 GMT

கென்யா நாட்டின் முன்னாள் பிரதமரின் மகளுக்கு, கேரளாவில் ஆயுர்வேத முறையில் வெற்றிகரமாக  கண் சிகிச்சை முடிந்துள்ளது.


பாரத நாட்டின் ஆயுர்வேத முறையும், சித்த வைத்திய முறையும், எந்தவிதமான கொடிய நோய்களையும் குணப்படுத்த வல்லது என்பதை உலகம் அறிந்து  வருகிறது.

உடல் உபாதைகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த மூலிகைகள்  கேரள மாநிலத்தில்  அதிகம் இருப்பதால், கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்கு  உலகம் முழுவதிலிருந்தும்  வரவேற்புண்டு. இச்சிகிச்சையை பயன்படுத்திக்கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் கேரளாவிற்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.


இவ்வரிசையில், கென்யா நாட்டின் முன்னாள் பிரதமரான ரயிலா ஓடிங்கா, அவரது மகளின் கண் சிகிச்சைக்காக  கேரளாவில் குடும்பத்தினருடன்  மூன்று வாரம் தங்கி, ஆயுர்வேத முறையில் சிகிச்சைப் பெற்று, அவரது மகளின் கண் பார்வையை திரும்பப்பெற்றுள்ளார்.


இதுகுறித்து கென்யா  நாட்டின்  முன்னாள் பிரதமர் ANI செய்தி நிறுவனத்திற்கு மகிழ்ச்சியாக அளித்த பேட்டியில் : நான் எனது மகளின் கண் சிகிச்சைக்காக கேரளாவிலுள்ள  கொச்சியில், மூன்று வாரங்கள் என் குடும்பத்தினருடன்  தங்கியுள்ளேன். சிகிச்சைக்கு பின்  எனது மகளின் பார்வைத்திறன் அதிகமாகியுள்ளது. எனது மகள் தன் கண்களைக் கொண்டு இவ்வுலகை காண்கிறாள் என்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்திய நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தால் எனது மகளின் கண் பார்வை மீண்டு விட்டது. இது எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. இது குறித்து நானும்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இம் மருத்துவ முறையை  கென்யா நாட்டிற்கு எடுத்துச் செல்வது குறித்து  கலந்தாலோசித்தோம்.

இவ்வாறு முன்னாள் கென்யா நாட்டின் பிரதமர் கூறினார். 

Tags:    

Similar News