இந்தியாவில் 1.56 லட்சம் ஆயுஷ்மான் பாரத் மையங்களில் முகாம்: எந்த தேதியில் தெரியுமா?

பிப்ரவரி 14 அன்று நாடு முழுவதும் உள்ள 1.56 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் சிறப்பு முகாம்கள்.

Update: 2023-02-14 01:30 GMT

ஆரோக்கியமான வாழ்க்கை சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இல்லம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 1.56 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் சுகாதார முகாம்கள் நடைபெறும். யோகா, ஜூம்பா, தொலை ஆலோசனை, ஊட்டச்சத்து திட்டம், தொற்று அல்லாத நோய்களின் பரிசோதனை மற்றும் மருந்துகளின் விநியோகம், சிக்கல் செல் நோய் பரிசோதனை முதலியவை நாடு முழுவதும் நடைபெறும் சுகாதார முகாம்களில் மேற்கொள்ளப்படும்.


உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கவும் பிப்ரவரி 14, 2023 அன்று அனைத்து ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் மிதிவண்டி பேரணி நடைபெறும். தங்களது அருகில் உள்ள சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் நடைபெறவுள்ள இந்த சைக்கிளதான் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.


"நமது உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு மிதிவண்டி ஓட்டுதல் மிகச் சிறந்த வழிகளுள் ஒன்று. உங்களால் இயன்ற வரை அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ, தொலைவாகவோ, அல்லது குறுகிய தூரமோ மிதிவண்டியில் பயணியுங்கள், ஆனால் நிச்சயம் மிதிவண்டியை ஓட்டுங்கள்" என்று ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில் சுகாதார மற்றும் ஆரோக்கியம் என்ற கருப்பொருளை ஊக்குவிப்பதற்காக நவம்பர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை ஓராண்டு காலம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News