நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.!

நாளை முதல் 4 நாட்கள் வரை வங்கிகள் அனைத்தும் இயங்காது என்ற அவிப்பால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-03-12 04:12 GMT

நாளை முதல் 4 நாட்கள் வரை வங்கிகள் அனைத்தும் இயங்காது என்ற அவிப்பால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

அகில் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பணிக்குறைப்பு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதாவது 15ம் மற்றும் 16ம் தேதி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை வங்கிகள் செயல்படாது.




 


ஏற்கெனவே மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளது. இதில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையில்லாதது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகமான ஊதியங்களை பெற்றாலும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் வங்கி ஊழியர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறான செயலாகும்.

சாதாரண பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே மத்திய அரசு வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Similar News