இ-சஞ்ஜீவனி திட்டம் மூலம் 100.11 மில்லியன் நோயாளிகளுக்கு சேவை: மோடி அரசின் மற்றொரு மைல்கல்!

இ-சஞ்ஜீவனி திட்டம் மூலம் 100.11 மில்லியன் நோயாளிகளுக்கு சேவை அளிக்கப்பட்டது.

Update: 2023-02-18 02:11 GMT

தொலை மருத்துவம் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரிந்த   இ -சஞ்ஜீவனி திட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதாரத் துறையில் இ-சஞ்ஜீவனி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு சுகாதாரப் பயணத்தில் இந்தியா முக்கிய பயணத்தை கடந்துள்ளது. இந்திய அரசின் தேசிய தொலை மருத்துவ தளமான இ-சஞ்ஜீவனி 10 கோடி பயனாளிகளுக்கு சேவை வழங்கி மற்றொரு முக்கியப் பயணத்தை பதிவு செய்துள்ளது.


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். தொலை ஆலோசனையின் டிஜிட்டல் வாயிலாக அளிக்கப்படும் சுகாதார சேவைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த டாக்டர் மாண்டவியா, தொலை மருத்துவத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் 2,29,057 பேர் மூலம் 1152 ஆன்லைன் ஓபிடி மற்றும் 15,731 கேந்திரங்கள் மூலம் 1,15,234 சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் வாயிலாக 100.11 மில்லியன் நோயாளிகளுக்கு சேவை அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.


நாள்தோறும் 5,10,702 நோயாளிகளுக்கு தொலை மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். மருத்துவ சேவைகளில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News