10வது மாநிலமாக உத்தரகண்டிலும் பறவைக் காய்ச்சல் பரவியது.!

10வது மாநிலமாக உத்தரகண்டிலும் பறவைக் காய்ச்சல் பரவியது.!

Update: 2021-01-12 14:46 GMT

பறவைக் காய்ச்சல் முதன் முறையாக கேரளா மாநிலத்தில் கோழி மற்றும் வாத்துக்கள் மூலமாக பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் தீவிர நடவடிக்கை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் 10வது மாநிலமாக உத்தரகண்டிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் உறுதியான நிலையில், இன்று கோட்வார், டேராடூனில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News