ஹிமாச்சல் தேசத்தின் தேர்தல் களம் - பா.ஜ.கவின் அசத்தலான தேர்தல் வாக்குறுதிகள்!
இமாச்சல் பிரதேசத்தில் பெண்களுக்கு அரசு பணியில் 3 மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பன்னிரண்டாம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் எட்டி வருகிறது. ஆளும் பா.ஜ.கவிற்கு, எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். வீடுகளுக்கு முன்னுரிமை இலவச மின்சாரம் என்று பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது.
இந்த நிலையில் பா.ஜ.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சியின் தலைவர் நட்டா நேற்று வெளியிட்டார். அதில் கூறிய முக்கியமான வாக்குறுதிகள் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 8 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்படும். வகுப்பு வாரிய சொத்துக்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ஆய்வு செய்யப்படும்.
ஐந்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும், பெண்களுக்கு அரசு பள்ளிகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும். ஆறு முதல் 12 வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று போன்று அறிக்கைகளில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஆக இருந்தது.
Input & Image courtesy: News 18