சீனாவின் சதியை முறியடித்த இந்திய ராணுவம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் பெருமிதம்!
இந்தியாவின் எல்லைக்குள் நுழையும் முயன்று சீன வீரர்களின் முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் எல்லைப் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி சின்னப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்பொழுது இந்திய சீன படைகள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலிருந்து வீரர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த மோதல் குறித்த தகவல்களை இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. இதனுடைய சீன படைகளின் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்தியாவில் இருந்து அவர்கள் ஒரு படி மண்ணை கூட எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு இந்திய ராணுவம் பலத்த சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே உறுதியாக, நான் கூறுகிறேன் இந்தியாவில் இருந்து சீனாவில் நடவடிக்கைகளை நாங்கள் கட்டாயம் முறியடித்து வருகிறோம். தற்போது நடந்த தாக்குதலின் போது இருதரப்பிலிருந்து சில வீரர்கள் காயமடைந்து இருக்கிறார்கள்.
இந்த மோதலில் நம் நம்முடைய வீரர்கள் யாருக்கும் உயிரிழப்பு, பலத்த காயங்களும் ஏற்படவில்லை என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்திய ராணுவ கமாண்டோக்களின் சரியான நேரத் தலையிட்டால் சீன படை அவர்களின் இடத்திற்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடைமுறையில் உள்ள விதிகளின்படி 11ஆம் தேதி வரை அந்த பகுதி இந்திய வீரர்கள், சீனா வீரர்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News