கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம்: அறிக்கையை வெளியீடு செய்த NIDM !

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சமடையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்(NIDM) எச்சரித்துள்ளது.

Update: 2021-08-23 13:40 GMT

இந்தியாவில் குறிப்பாக முதல் அலை போது அவ்வளவாக பாதிப்புகள் இல்லாமல் இருந்தது. அதன்பின் ஏற்பட்ட இரண்டாவது அலையின் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. அதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. ஆனால் மக்களிடம் தற்பொழுது மூன்று அலை எப்போது ஏற்படும்? அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தொற்று குறைந்தாலும் இந்தியாவில் 3வது அலை பரவும் அபாயம் உள்ளது என்று டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.


குறிப்பாக கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று IIT சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்(NIDM) சமீபத்தில் அளித்த அறிக்கையில் படி, பெருந்தொற்றின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம் என்று தெரிவித்துள்ளது.


முதல் அலையின் பரவல் குறைந்ததும், இனி பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் மக்கள் காட்டிய அலட்சியம் தான், 2வது அலை மிக மோசமான பாதிப்புகளுக்கு வழிவகுத்தது. அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளனர். முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் 3வது அலை பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

Input:https://www.aninews.in/news/national/general-news/covid-19-third-wave-peak-likely-in-october-nidm-report20210823122710

Image courtesy:ani news 


Tags:    

Similar News