கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி: மேலும் சாதனை படைத்த இந்தியா !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் 58 கோடியைக் கடந்துள்ளது இதன் காரணமாக மற்றொரு சாதனையை இந்தியா படைத்தது.

Update: 2021-08-22 13:29 GMT

இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.எந்த ஒரு இடையூறும் இன்றி மக்களுக்கு தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்யும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில அரசு எடுத்துக் கொண்டு வருகின்றதோ அந்த வகையில் தற்போது இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 58 கோடியை கடந்து ஒரு சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 58 கோடியைக் கடந்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. 


இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 52,23,612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் நோயினால் குணமடைந்தவர்களின் விகிதம் 2020, மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் அதிகமாக 97.57 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 56 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.


வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.00 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.95 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 27 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 76 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா தொற்று நோயை எதிர்த்த மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  

Input:https://www.livemint.com/news/india/covid-vaccination-update-over-58-crore-jabs-administered-in-india-so-far-11629556931026.html

Image courtesy:livemint 


Tags:    

Similar News