கொரோனாவுக்கு இடையில் குழந்தைகள் பள்ளிக்கு வரலாமா? தலைமை மருத்துவர் கருத்து !
தற்போது உள்ள கொரோனாவுக்கு மத்தியில் குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கலாம் என்று தலைமை மருத்துவர் N.K.அரோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அவர்களுடைய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரலாமென்று மத்திய அரசின் நோயெதிர்ப்பு ஊட்டலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) தலைமை மருத்துவர் N.K.அரோரா தெரிவித்துள்ளார். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் கொரோனா தொற்றால் தீவிர பாதிப்பை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது உறுதியாகியுள்ளது. குழந்தைகளின் அறிவு மேம்பாட்டுக்காகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசையாக உள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 18 வயது மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே முதலில் குழந்தைகளைச் சுற்றியுள்ள பெற்றோர், ஆசிரியர்கள் மற்ற பெரியவர்களை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய் தொற்றிலிருந்து பாதிப்பு தற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். வரும் அக்டோபரில் கொரோனா 3வது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் இப்பொழுது வரை தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும். ஜைகோவ் என்ற உலகின் முதல் DNA கொரோனா தடுப்பூசி ஆகும். இது வரும் அக்டோபரில் 12 வயது முதல் 17 வயதுவரையிலான குழந்தைகளின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Input:https://www.ndtv.com/india-news/india-coronavirus
Image courtesy: NDTV news