இந்தியாவிற்குள் ஆப்கான் மக்கள் வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசின் அறிவிப்பு !
ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். அங்குத் தற்பொழுது இருபது ஆண்டு காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்களுக்கு மக்கள் பயந்து வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இதன் காரணமாகவே ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படுகின்றது. மேலும் இதனால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றது குறிப்பாக ஆப்கான் மக்கள் தங்கள் நம்பு ஒரே நாடாக இந்தியா அவர்கள் கருதுகிறார்கள்.
ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருந்தனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து பல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படை விமானம் தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை மீட்டு வருகின்றன. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த சூழ்நிலைகளில், ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் அதிகமான அளவு இந்தியாவுக்கு வர முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ-விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியா வர விரும்பும் ஆப்கன் மக்கள் இதற்கான இணையதளத்தில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் ஆப்கான் மக்கள் இனி இந்தியாவிற்கு வர இ-விசா கட்டாயம்.
Image courtesy:livemint