ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய திட்டம்: மருத்துவ தாவரங்களை ஊக்குவிக்க முடிவு !

தற்பொழுது ஆயுஷ் அமைச்சகம் சார்பாக ஒரு ஆண்டில் சுமார் 75,000 ஹெக்டரில் மருத்துவ தாவரங்கள் பயிரிடும் திட்டம் செயல்படுத்த பட்டு உள்ளது.

Update: 2021-09-02 13:40 GMT

தற்பொழுது ஆயுஷ் அமைச்சகம் சார்பாக ஒரு ஆண்டில் 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்கள் பயிரிடப்படும் திட்டம் தொடங்கப்படும் என ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் படி, இந்தியாவில் மருத்துவ தாவரங்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக ஓர் தேசிய பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் அடுத்த ஒரு ஆண்டில் 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்கள் பயிரிடப்படும்.


குறிப்பாக இந்தத் திட்டம் உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர், மகாராஷ்டிராவின் புனேவில் தொடங்கப் பட்டுள்ளது. மேலும் மருத்துவத் துறையில் குறிப்பாக தாவரங்களை வளர்ப்பது தொடர்பாக நம்முடைய நாட்டில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. 75,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மருத்துவ தாவரங்களை பயிரிடுதன் மூலம் மருந்துகளின் கையிருப்பை உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்திற்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் விளங்கும் என்று ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும் ஆயுஷ் அமைச்சகம் சார்பாக ஒய் பிரேக் செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலி நோய்களைத் தடுக்கும் ஆயுஷ் மருந்துகளின் விநியோகம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் கருத்தரங்கங்கள் மூலமாக மாணவர்களுக்கு மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றின் தன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்து இவற்றின் முக்கிய பங்காக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input:https://www.eastmojo.com/national-news/2021/09/02/medicinal-plants-to-be-cultivated-in-75000-hectares-of-land-ayush-ministry/

Image courtesy:wikipedia


Tags:    

Similar News