பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிலையுடன் கோவில் அமைத்த பா.ஜ.க தொண்டர் !

தற்பொழுது மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அவர்களுக்கு சிலையுடன் கோவில் கட்டிய பா.ஜ.க தொண்டரின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2021-08-19 13:41 GMT

இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு முயற்சிகளையும் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் பா.ஜ.க தொண்டர்கள் குறிப்பாக மோடி அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் அவர்கள் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டுக்காக அவர் செய்யும் நல்ல விஷயங்களை பார்த்து அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறுகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர், பிரதமர் மோடி அவர்களுக்கு சிறிய கோயிலை அமைத்து உள்ளார். 


மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க தொண்டர் மயூர் முந்தே. இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்பளவு சிலையுடன் கூடிய சிறிய கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து மயூர் கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே புனேயில் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உட்பட பல திட்டங்களை பிரதமர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.


எனவே எனது சொந்த இடத்தில், சொந்த செலவில் சிறிய அளவிலான கோவிலை கட்டி உள்ளேன். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவாகி உள்ளது. மோடியின் மார்பளவு சிலை மற்றும் கோவில் கட்ட தேவைப்பட்ட சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்பூரில் இருந்து வாங்கி வந்தேன் என அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்டப்பட்ட கோவிலை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Input: https://www.news18.com/news/politics/pm-modis-statue-in-pune-temple-disappears-overnight-amid-objections-by-pmo-ncp-dig-4103195.html

Image courtesy:news18 


Tags:    

Similar News