இந்தியா வந்தடைந்த ஆப்கன் மக்களுக்கு கொரோனா உறுதி: மத்திய அமைச்சர் தகவல் !

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லியை வந்தடைந்த 78 பேரில் 16 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

Update: 2021-08-25 13:26 GMT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு மிகப் பெரிய பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி வருகிறார்கள். காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரகின்றனர். அண்மையில் வெளியான செயற்கைகோளின் புகைப்படத்தின் அங்கு உள்ள விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. ஆப்கனில் இருந்து அவர்களை வெளியேற கூடாது என்று தலிபான்கள் கூறி வருகின்றனர். 


இதற்கிடையில், ஆப்கனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. அதன்படி, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காபூலில் சிக்கியிருந்த 25 இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் என 78 பேரை மீட்டு அங்கிருந்த தஜிகிஸ்தான் அழைத்து வரப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் அந்த 78 பேரும் தஜிகிஸ்தான் துஷான்பே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், இந்தியா அழைத்து வரப்பட்ட 78 பேரில் 16 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது தொற்று உறுதியான அனைவரும் தற்பொழுது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை இந்தியா 228 இந்தியர்கள் உட்பட 626 பேரை காபூலில் இருந்து மீட்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவலை தெரிவித்துள்ளார். 

Input:https://www.indiatoday.in/coronavirus-outbreak/story/afghan-evacuees-india-covid-positive-1844944-2021-08-25

Image courtesy:India Today



Tags:    

Similar News