உலகில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்: இடம் பிடித்த இந்திய நகரம் !
உலகில் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இந்திய நகரமான மும்பை, டெல்லி இடம் பிடித்துள்ளன.
உலகில் ஒவ்வொரு நகரங்களிலும் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு பாதுகாப்புக்கு வருகிறார்கள் என்பது தானே முக்கியம். அத்தகைய பாதுகாப்பு நகரங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா நகரமும் டாப் 50க்குள் நுழைந்து இருக்கிறது. உலகின் பாதுகாப்பான நகரங்களில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி, மும்பை முதல் 50 நகரங்களில் இடம் பிடித்தன.
எப்பொழுதுமே மக்கள் கூட்டமாக இயங்கக்கூடிய டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பதும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "தி எக்னாமிஸ்ட் குரூப்" ஊடக நிறுவனத்தின் புலனாய்வு பிரிவு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி 2021-ம் ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகன் முதலிடம் பிடித்தது.
கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 12வது இடம் கிடைத்தது. பிரிட்டன் தலைநகர் லண்டன் 15வது இடம், சீன தலைநகர் பெய்ஜிங் 36வது இடம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 38வது இடத்தைப் பெற்றன. இந்திய தலைநகர் டெல்லி 48வது இடத்தையும், வர்த்தக நகரான மும்பை 50வது இடத்திலும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: Times of India