சிறுதானியங்களை ஏற்றுமதி செய்யும் முயற்சி: மத்திய அரசு எடுக்கும் புதிய அவதாரம்!
சிறுதானியங்களை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
சிறுதானியங்களை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கண்டறிய வாங்குவோர், விற்போர் இடையே மெய்நிகர் கூட்டத்திற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் ஏற்பாடு செய்தது. சிறுதானியங்கள் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கண்டறிய வாங்குவோர், விற்பனை செய்வோர் இடையே மெய்நிகர் கூட்டத்திற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் இன்று ஏற்பாடு செய்தது.
ஐக்கிய அரபு அமிரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் தலைமையின் கீழ், ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து வாங்குவோர், விற்பனை செய்வோர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு சிறுதானியங்கள் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், அதற்கான ஏற்றுமதியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், சில்லரை விற்பனை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய மின்னணு தகவல் புத்தகத்தை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் வெளியிட்டது.
இக்கூட்டத்தில் பல்வேறு இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறுதானியங்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறுதானியங்கள் மற்றும் அதன் மதிப்புக் கூட்டுப்பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து உரையாடினார்கள்.
Input & Image courtesy: News