பயணிகளுக்கு உணவு வழங்கலாம்: ரயில்வே வாரியம் ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு உத்தரவு !

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து விரைவு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் ரயில்களில் உணவு வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2021-11-20 10:38 GMT

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து விரைவு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் ரயில்களில் உணவு வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டபோது, உடனடியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதன்பின்னர் இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தொற்று குறைந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே தொற்று குறைவு காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த விரைவு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் முழுமையாக ஓடத்துவங்கியுள்ளது. இதனிடையே தொற்று பரவல் காரணமாக ரயிலில் பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் மீண்டும் உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்தியன் ரயில்வே வாரியம் ஐ.ஆர்.சி.டிசி.க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா தொற்று காரணமாக சமைக்கப்பட்ட உணவுகளை ரயிலில் வழங்குவதற்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான சேவைகளை தொடங்க வேண்டும். பயணிகள் சாப்பிடக்கூடிய உணவுகளை உடனடியாக தயார் செய்து விநியோகிக்கலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Opindia


Tags:    

Similar News