தலைநகர் கலவரம்: வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்.!

தலைநகர் கலவரம்: வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்.!

Update: 2021-01-28 11:48 GMT

கடந்த 26ம் தேதி இந்திய குடியரசு தினவிழாவில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தையை விவசாயிகளிடம் நடத்தியது.

ஆனால் பேச்சு வார்த்தைக்கு வரமறுத்து கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்போது போலீசார் அனுமதித்த வழித்தடங்களை விட்டு வேறு வழியில் செல்ல விவசாயிகள் ஆரம்பித்தனர். இதனிடையே விவசாயிகள் போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொண்ட கூட்டம் செங்கோட்டைக்குள் புகுந்து இந்திய தேசியக்கொடியை கீழே தூக்கிப்போட்டு விட்டு அவர்களின் கொடியை ஏற்றினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் உள்ள குடிமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உண்மையான இந்தியர்கள் யாரும் தனது தாய் நாட்டு கொடியை அவமதிப்பு செய்ய மாட்டார்கள். விவசாயிகள் போர்வையில் ஆயிரக்கணக்கான காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுவினர் என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விவசாயிகள் அனைவரும் வீட்டிற்கு செல்லுங்கள், உங்கள் அருகாமையில் பல தீவிரவாத குழுக்கள் இடம் பெற்றுள்ளது. அவர்கள் உங்களின் போராட்டத்தை திசை திருப்பிவிடுவார்கள் என எச்சரித்து வந்தது.

அதே போன்று குடியரசு தினவிழாவின்போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் டெல்லி போலீசாரை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் 100க்கும் அதிகமான போலீசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். கூட்டத்தில் வன்முறை நிகழ்த்தியது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மேலும், கலவரத்திற்கு உறுதுணையாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து மற்றும் ஆதரவாளர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் கடந்த 2 மாதங்களாக முகாமிட்டிருந்த விவசாயிகள் போர்வையில் இருந்த கும்பல் ஒன்வொன்றாக தலைமறைவாக ஆரம்பித்துள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் மறைந்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News