ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண்சிங்குக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதில் விங் கமாண்டர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அதாவது 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Update: 2021-12-10 05:59 GMT

இதனிடையே அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் வருண்சிங் பெங்களூருவில் உள்ள ராணுவ மகமாண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உடலை மறு சீரமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற 7 மருத்துவர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் மிகத்தீவிர சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News