தமிழகத்திற்கு 30.6 டி.எம்.சி., நீரை உடனே திறக்க உத்தரவு !
தமிழகத்திற்கு 30.6 டி.எம்.சி., நீரை உடனே திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு 30.6 டி.எம்.சி., நீரை உடனே திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்தவிட மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்டார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை பற்றிய பேச்சை ஆணையம் நிராகரித்தது. மேலும், உடனடியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு 30.6 டி.எம்.சி. நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2834385