சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைப்பு.!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 4ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-14 10:51 GMT

பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




 


அதே போன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 4ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்திற்கு பின்னர் ஆய்வு நடத்தப்பட்டு, தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.




 


இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்றுள்ளனர். கொரோனா காரணமாக அச்சத்துடன் இருந்த மாணவர்களுக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது.

Similar News