சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு ரத்து: உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி.!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை எப்படி வழங்க உள்ளீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-04 05:34 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவில் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழுஊரடங்கை விதித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையானது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்தாமல் இருந்து வந்தது மாணவர்கள் குழப்பமான நிலைக்கு சென்றனர். இதனை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News