சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எப்போது? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்.!

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எப்போது? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்.!

Update: 2020-12-22 19:27 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் சி.பி.எஸ்.இ., தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த ஆறு மாத மாலமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் இது பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சி.பி.எஸ்.சி., தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது எனவும் மாணவர்கள், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 10 மற்றும் 12வது வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

Similar News