பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளிலும் ஜனாதிபதி உரையாற்றினார்.

Update: 2022-02-01 02:48 GMT

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளிலும் ஜனாதிபதி உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டினார். பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றது என்று ஜனாதிபதி கூறினார்.

இந்நிலையில், 2022, 2023 நிதியாண்டுக்கான காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவரின் 4வது பொது பட்ஜெட் ஆகும். இதில் பல துறைகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட் குறித்து இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: Daily Thanthi

Image Courtesy: The Quint

Tags:    

Similar News