மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா? மத்திய அரசின் நடவடிக்கை!

நீர்வளம் குறைவதைத் தடுக்கவும், மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை.

Update: 2023-02-15 01:30 GMT

நீர்வளம் மாநிலப் பட்டியலில் உள்ளதால், நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்வளங்களைத் திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்யும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவைப் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் மழைநீர் சேரிப்புக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துகிறது.


ஜல்சக்தி அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், வீட்டுவசதி அமைச்சகம் ஆகியவையும் மாநில அரசுகளும் மழைநீர் சேகரிப்பில் பங்காற்றுகின்றன. நீர்ப்பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையில் நீர்நிலைகள் தொடர்பான புவி ஆய்வு, அனைத்து மாவட்டங்களிலும் ஜல்சக்தி மையங்களை அமைத்தல், வனப்பரப்பு குறைதலைத் தடுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு பணிகள் செயல் படுத்தப்படுகின்றன.


ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு இயக்கம் நாடு தழுவிய அளவில் 2022 அன்று மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதன்கீழ் தற்போது வரை நீர்த்தொடர்பான 39.46 லட்சம் பணிகள் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்த்தொடர்பான பணிகளுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.37 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News