கொரோனா தொற்று ஓய்வு: எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் விடுவிக்க மத்திய அரசு அனுமதி!
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனிடையே நேற்று (நவம்பர் 10) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனிடையே நேற்று (நவம்பர் 10) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டு 5 கோடி ரூபாய் இரண்டு தவணைகளில் விடுவிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓய்ந்து வரும் நிலையில், மீண்டும் எம்.பி. தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதியை விடுவிப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில் செலவு செய்வதற்காக ஒரே தவணையாக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அடுத்த வரும் நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும் என்றார்.
Source, Image Courtesy: Dinamalar