கோடை காலத்தில் 230 ஜிகாவாட் மின் தேவை: மத்திய அரசின் துரித நடவடிக்கை!
கோடை காலத்தில் அதிகபட்ச மின் தேவை 24 இருக்கும் அவற்றை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் ஒருநாள் அதிகபட்ச மின் தேவையானது சுமார் 230 ஜிகாவாட் அளவை உற்பத்தி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று மத்திய மின்துறைச் செயலர் அசோக் குமார் தெரிவித்து இருக்கிறார். அடுத்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்படும் அதிக அளவான மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் மத்திய மின்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்த மத்திய மின்சார அமைச்சகத்தின் தலைவர் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், நிகழ்வாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அகில இந்திய அளவிலான மின் தேவை 204 அளவில் இருந்தது. இது அடுத்த ஆண்டில் ஏப்ரலில் 230 ஜிகா வாட் என்று அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதன் காரணமாக தொடர்ச்சியான மின்விநியோகத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் குறிப்பாக அரசு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
முதலாவது போதிய மின்சார உற்பத்தித் திறனை உறுதி செய்ய வேண்டும். அதற்காக அப்போதைய நேரத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின் உற்பத்தியில் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், இரண்டாவது நிலக்கரி உற்பத்தி தொடர்பான நிலைக்கு உற்பத்தி பெருக்குவதற்கு குறித்தும், அதன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News