மாதம் தோறும் மத்திய அரசு 16 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய அசத்தல் தகவல்

ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு 16 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.

Update: 2022-11-27 05:51 GMT

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற சி.ஆர்.பி.எப் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில், 'மத்திய அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்தியா இளைஞர்களின் சக்தியினால் நிறைந்த ஒரு நாடு. இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதி எடுத்து இருக்கிறது. அதன் காரணமாக இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.


உலகம் பொருளாதார நெருக்கடியில் எதிர்கொண்டபோதும் இந்திய வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15-16 லட்சம் வேலை வாய்ப்புகளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் கொள்கைகளால் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையும் மிகவும் எளிதாகிவிட்டது.


முதல் முடிவு எப்பொழுதுமே தேசம் தான் பெரிது என்ற தாரக மந்திரத்தை இளைஞர்கள் தங்களது வாழ்வில் தவறாது கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் கடமையில் தேசத்தை முதன்மைப் படுத்துபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். விண்வெளி துறை முதல் பாதுகாப்பு துறை வரை அனைத்திலும் தற்போது தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருக்கிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார்.

Input & Image courtesy: Economic Times

Tags:    

Similar News