உச்ச கட்டத்தில் சூடான் போர்... இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்... மத்திய அரசின் ஆபரேஷன் காவேரி அதிரடி!
சூடான் உள்நாட்டு போரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும் சூடானில் தற்பொழுது உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. சூடான் தலைநகர் கார்ட்டூமில் சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ குழுக்களுக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் ‘காவேரி’ நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், சுமார் 500 இந்தியர்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க இந்தியா "ஆபரேஷன் காவேரி"யைத் தொடங்கியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம்.
ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா போரின் போது உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்டு கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதை போன்று இந்த ஒரு தருணத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெய்சங்கர் ட்விட்டரில், "சூடானில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை மீட்டெடுக்க காவேரி ஆபரேஷன் நடந்து வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் போர்ட் சூடானை அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அவர்களை இந்தியாவிற்குள் வர தயாராக உள்ளன.
அனைவருக்கும் உதவ உறுதிபூண்டுள்ளோம்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார். முன்னதாக, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து வெளியேற்றும் பணியின் ஒரு பகுதியாக, 27 நாடுகளின் குடிமக்களுடன் சில இந்தியர்களையும் தங்கள் நாடு வெளியேற்றியதாகத் தெரிவித்தது. இந்தியா உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் வெளியேற்றப்பட்டதாக டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது. பிரெஞ்சு வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. நேற்றிரவு, இரண்டு இராணுவ விமான சுழற்சிகள் இந்திய மக்கள் உட்பட 28 நாடுகளில் இருந்து 388 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அது ட்வீட் செய்தது. பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் இதுவரை 5 இந்திய மக்கள் வெளியேற்றப்பட்டதாக பிரான்ஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்பொழுது மத்திய அரசின் ஆப்ரேஷன் காவேரி என்ற திட்டத்தின் மூலமாக 500 இந்தியர்களை முதற்கட்டமாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அங்கு இருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வெளியேற்றப்படுவார்கள் என்று நம்பிக்கை கிடைத்து இருக்கிறது.
Input & Image courtesy: Indiandefense News