வரலாற்றுச்சாதனை படைத்து இருக்கிறது மத்திய அரசு: பிரதமர் மோடி குறிப்பிட்ட காரணம் என்ன?

பழங்கால இந்திய பாரம்பரியத்தின் அறிவாற்றல், சேவை மற்றும் மனிதாபிமானத்தைப் பரப்பியவர் கிருஷ்ணகுரு.

Update: 2023-02-05 01:41 GMT

அசாம் மாநிலம் பார்பேட்டாவில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் இன்று நடைபெற்ற உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு அகண்ட கீர்த்தனையில் காணொலி மூலம் பங்கேற்று உரையைாற்றினார். இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றும் என்ற அடிப்படையில் 50 சுற்றுலாத் தலங்களை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். நதி வழிப் பயணம் மேற்கொள்ளும் கங்கா விலாஸ் கப்பல் விரைவில் அசாம் வந்தடைய இருப்பதை மேற்கோள் காட்டிய அவர், இந்தப் பயணம் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் கூறினார்.


கலைஞர்களின் பாரம்பரிய திறமைகளுக்காக கிருஷ்ணகுரு மேற்கொண்ட பணிகளை நினைவுகூர்ந்த அவர், தமது அரசு கலைஞர்களின் பாரம்பரிய திறமைகளை உலகறியச் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக வரலாற்றுச்சாதனை படைத்திருப்பதை குறிப்பிட்டார். அசாம் பெண்களின் திறமைகள் மற்றும் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்ற கிருஷ்ண குருவின் கோட்பாட்டின் படி, பட்ஜெட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதையும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து, அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதற்காக மகிளா சம்மான் எனப்படும் மகளிர் நிதிச் சேமிப்பு சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.


இந்த திட்டத்தில் சேமிப்பதன் மூலம் பெண்கள் அதிகளவில் வட்டி கிடைக்கும் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 70,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயரில் கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறினார். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயாவைச் சேர்ந்த பெண்களுக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் நடப்பு பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இடம் பெற்றிருப்பதையும் பிரதமர் பட்டியலிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News