மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு!
Central Govt review the increase of corona virus in 10 states.
தற்பொழுது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தாக்கம் கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகாவிலும் காணப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கொரோனா தொற்று அதிகரிக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. குறிப்பாக இந்த 10 மாநிலங்களில், 46 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாவட்டங்களில் எந்தவித தளர்வும் அளிக்க வேண்டாம்.
மேலும் 45 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதிகளவில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது போல், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
Image courtesy: Hindustantime news