எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிட்டு கேட்க வேண்டும் ! - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் காரணமாக நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2021-08-12 10:58 GMT

அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் காரணமாக நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, தங்களின் பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் குழப்பம் விளைவிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருந்தது.

மேலும், வரி கட்டுபவர்கள் மற்றும் மக்களின் நலனை பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. முதலமைக்கண்ணீர் வடிப்பதை நிறுத்தி விட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Anurag Thakur - விக்கிபீடியா

https://www.dinamalar.com/news_detail.asp?id=2821763

Tags:    

Similar News