வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை 5 சதவீத மட்டுமே உயர்வு: மத்திய அமைச்சர் தகவல்!
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது.
இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திபப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் பேசியதாவது: மற்ற நாடுகளை விட பெட்ரோல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்ட விலை 10ல் ஒரு பங்குதான். ஆனால் அமெரிக்காவில் 51 சதவீதம், கனடாவில் 52 சதவீதம், ஜெர்மனியில் 55, பிரிட்டனில் 55, பிரான்ஸ் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar