பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் பயணம் - ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு!
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றிய பிறகுதான் எங்கள் பயணம் முடிவடையும் என்று மத்திய இராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் கூறியிருக்கிறார்.
சுயநல அரசியலுக்கு ஆன இடம்:
கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடன் போரிட காஷ்மீரில் இந்திய படைகள் நுழைந்தன. எனவே நேற்றைய தினத்தில் ஷவ்ரியா திவாஸ் என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது . இதில் கலந்துகொண்ட மத்திய ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் பேசுகையில், காஷ்மீர் ஒரு காலத்தில் பூலோ சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது அது சுயநல அரசியலுக்கு ஆன இடமாக மாறி இருக்கிறது. பாரபட்சமாக நடத்தப்பட்டது நீண்ட காலமாக இருளில் வைக்கப்பட்டது.
வளர்ச்சியின் விடியல்:
ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் அமலில் இருந்த ஆச்சரியமும் நிகழ்ந்தது. மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் பஞ்சாப்பை தாண்டி காஷ்மீருக்கு சென்றது இல்லை. ஆனால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வளர்ச்சிக்கான புதிய விடியல் பிறந்துள்ளது. காஷ்மீர் லடாக் ஆகியவை ஒன்றின் பின் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. காஷ்மீர் புதிய உயரத்தை தொட்டுள்ளது. இந்த பகுதியில் வளர்ச்சியை தற்போது தொடங்கி இருக்கிறோம். வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்து உள்ளோம்.
பாகிஸ்தான் பகுதிகளில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு:
ஆக்கிரமிப்புகளை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் தற்போது முதலை கண்ணீர் விடுகிறது. அதை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை மக்களுக்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு உரிமை அளித்துள்ளது என்று நான் கேட்க விரும்புகிறேன். அங்கு நடக்கும் மனித தன்மையற்ற செயல்களுக்கு பாகிஸ்தானை முழு பொறுப்பு என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News