பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு நாடு முழுக்க தடை? மத்திய அரசு தீவிரம்!

Update: 2022-04-16 01:15 GMT

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பொதுமக்களை தூண்டிவிடும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் தகவல் வெளியானது. 

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் இந்த அமைப்பு தடைசெய்யப்படவுள்ளது. இந்த அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் ஏற்பட்டது. சட்டத்தின்படி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குக்குள் வெளியாகும் என மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2018ம் ஆண்டே இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கேரளா அரசு முன்னெடுத்தது. 2019 குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்த அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் போக்குகள் ஏற்பட்டன. குறிப்பாக, டெல்லி,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதக் கலவரங்களாக உருவெடுத்தன.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தர பிரதேச அரசு அறிக்கை சமர்ப்பித்தது.2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள், கேரளா ஹாதியா வழக்கு போன்ற வழக்கிலும் இந்த அமைப்பு மீது புகார்கள் கூறப்பட்டன.

Similar News