இடமாற்ற சிபாரிசுக்கு அமைச்சர், எம்.பி.க்களை அணுகினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளை எச்சரித்த மத்திய அரசு!
மத்திய செயலகத்தை சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி அதிகாரிகளான உதவி செக்ஷன் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
மத்திய செயலகத்தை சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி அதிகாரிகளான உதவி செக்ஷன் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
இது பற்றி அத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உதவி செக்ஷன் அதிகாரிகள் பலர் தங்களின் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மருத்துவத்தற்காக பணியிட மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி அவர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலமாக பரிந்துரைக்காக சென்று கடிதங்களை பெற்று வருகின்றனர். இது போன்றவர்களை நாங்கள் கடுமையாக அணுக நேரிடும். இது போன்று விதிமுறையை மீறி அணுகும் உதவி செக்ஷன் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
எப்போதும் தங்களின் பணிகளில் மேலதிகாரிகளோ அல்லது அரசியல் செல்வாக்கோ, வெளிப்புற செல்வாக்கோ செலுத்தக் கூடாது என்று அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளில் இருக்கிறது. எனவே அதனை பயன்படுத்தி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:One India