கன மழை எதிரொலி: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை!

சபரிமலையில் கோயில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

Update: 2021-10-17 02:23 GMT

சபரிமலையில் கோயில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நேற்று (அக்டோபர் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

அதே போன்று இன்று (அக்டோபர் 17) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் வருகின்ற 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் 19ம் தேதி வரை கனமழை நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து 19ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு அம்மாநில முதலமைச்சர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dailythanthi


Tags:    

Similar News