பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் அதிகளவு குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக உள்ள நிலை உருவாகியுள்ளது. அது போன்று பராமரிக்க முடியாத உள்ள குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-22 03:25 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் அதிகளவு குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக உள்ள நிலை உருவாகியுள்ளது. அது போன்று பராமரிக்க முடியாத உள்ள குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இது போன்ற சமயங்களில் குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு பல பெற்றோர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பல ஆயிரம் குழந்தைகள் அப்பா, அம்மா என்ற அனைத்து உறவுகளையும் இழந்து தனியாக தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற சமயங்களில் அனைத்து உதவிகளையும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுரைக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், குறிப்பாக பெற்றோரை இழந்து தவிக்கிற குழந்தைகள் மீது மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அனாதையாக இருக்கும் குழந்தைகள், சரியான சமயத்தில் உதவியும், ஆதரவும் தேவைப்படுகிற மூத்த குடிமக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தற்போது கிடைக்கிற வசதிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Similar News