போலி இந்திய அடையாள அட்டையோடு எல்லையில் ஊடுருவும் சீனர்கள் - பின்னணியிலுள்ள மிகப்பெரிய சதி திட்டம்!

Chinese national holding PAN card arrested in Madhubani near Indo-Nepal border

Update: 2021-12-20 14:20 GMT

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மத்வாபூர் பகுதியில் 39 வயதான சீன நாட்டவரான ஜியோ ஜியாங் ஷி என்பவரை, சஹாஷ்டிரா சீமா பால் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள புஜியான் மாகாணத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட சீன நாட்டவர் ஜியோ ஜியாங் ஷி சரியான ஆவணங்கள் இல்லாமல் இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். சீன நாட்டவர் பான் கார்டு, நேபாள விசா மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை எடுத்தது வந்ததாக பாதுகாப்பு ஏஜென்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன .

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) அவர் மத்வாபூரில் உள்ள காந்தி சௌக்கின் சந்தையில் , சர்வதேச எல்லைப்பகுதியான  295/2 என்ற தூண் அருகே தடுத்து வைக்கப்பட்டார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே SSB திறந்த எல்லை உள்ளது. அங்கு அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் எஸ்எஸ்பி அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் பான் கார்டை கையில் வைத்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்த எந்த ஆவணத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்எஸ்பி அவரை உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புலனாய்வுப் பிரிவைத் தவிர, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் (SIB) அதிகாரிகள் அவரை விசாரித்தனர். மேலும் இந்த சந்தேகத்திற்குரிய சீன நாட்டவர் குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு (MEA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று 14வது பட்டாலியனின் SSB கமாண்டன்ட் சந்திர சேகர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மதுபானியில் சட்டவிரோதமாக சர்வதேச எல்லையைத் தாண்டிய வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். வடக்கு பீகாரின் பெரும்பகுதி நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், சீனா வெகு தொலைவில் இல்லை என்பதால் இப்பகுதி மிக உணர்திறன் வாய்ந்தது.




Tags:    

Similar News