உலகதரத்துக்கு இணையான புதிய சாப்ட்வேர் தயாரிப்பு: சென்னை ஐ.ஐ.டிக்கு மத்திய அமைச்சர் புகழாரம்.!

உலகதரத்துக்கு இணையான புதிய சாப்ட்வேர் தயாரிப்பு: சென்னை ஐ.ஐ.டிக்கு மத்திய அமைச்சர் புகழாரம்.!

Update: 2020-10-22 11:12 GMT

கப்பல் போக்குவரத்து சேவைகளை கண்காணிக்கும் முறைகளை மேற்கொள்வதற்காக உள்நாட்டில் சாப்ட்வேர் ஓன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே சொந்த அறிவுத்திறனுடன் தயாரிக்கப்பட்ட இந்த நவீன SOFT WARE குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தில்லியில் இந்த சாப்ட்வேர் - ஐ தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பேசிய அமைச்சர், " இந்திய துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து தொடர்பான சேவைகளை கண்காணிப்பதற்கும் , தானாகவே மேலாண்மைப் பணிகள் நடைபெற உதவும் வகையில் இது வரை இந்திய வெளி நாட்டு சாப்ட்வேர்களை பயன்படுத்தி வந்தது. இதற்காக ஏராளமான கோடிகள் செலவு செய்யப்பட்டன.

இப்போது அதிக துறைமுக சேவைகளும், கப்பல்களின் சேவைகளும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதனால் உள்நாட்டு தேவைகளை நமக்கு நாமே சரி செய்து கொள்ளும் வகையில் நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆத்மநிர்பார் நோக்கத்தின்படி உள்நாட்டு சாப்ட்வேர் தயாரிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

இந் நிலையில் நமது சென்னை ஐ.ஐ.டி மென்பொருள் பொறியாளர்கள் கப்பல் மற்றும் கடற்பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மிகச்சிறந்த சாப்ட்வேர் - ஐ நம் நாட்டிலேயே சொந்த நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர். அதுவும் உலகத் தரத்துக்கு ஈடாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் என்றார்.

இந்த புதிய இந்திய தயாரிப்பு மூலம் கப்பல் போக்குவரத்தை எளிதாக கண்காணிக்கலாம், துறைமுகத்துக்குள் அல்லது நீர் வழிக்குள் போக்குவரத்தை விரிவாக நிர்வகிக்கலாம், இதர போக்குவரத்தின் நிலை மற்றும் வானிலை ஆபத்து தொடர்பான எச்சரிக்கைகளை இந்த சாப்ட்வேர் அளிக்கிறது.. கடலில் பாதுகாப்பான பயணத்திற்கு இந்த சாப்ட்வேர் பங்களிப்பு செய்கிறது.

கடலோரப் பகுதிகள் மற்றும் பணியிடங்கள் பகுதிகளை பாதுகாக்கும் பணிகளையும் இது செய்கிறது. இந்திய கடற்கரை இப்போது ஏறக்குறைய 15 விடிஎஸ் அமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு அமைப்பிற்கும் அதன் சொந்த விடிஎஸ் மென்பொருள் இருப்பதால் இப்போது துறைமுக பணிகள் எளிதாகின்றன. 

இதற்காக கப்பல் அமைச்சகம் பத்து கோடி ரூபாயை வி.டி.எஸ் மென்பொருளை உருவாக்க சென்னை ஐ.ஐ.டி.க்கு கொடுத்துள்ளது என்றார் அமைச்சர் மன்சுக் மாண்டவிய. மேலும் பிரதமரின் நரேந்திரமோடியின் ஆத்மநிர்பார் கனவை நனவாக்கிவரும் சென்னை ஐ.ஐ.டியை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Similar News